கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் ஒரே பள்ளியில் 107 மாணவர்களுக்கு கொரோனா தொற்று: கட்டுப்பாடுகள் தீவிரம்..!

சிக்மகளூர்: கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் ஒரே பள்ளியில் 107 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் எனும் புதிய ரக உருமாறிய கொரோனா வைரஸை கவலையளிக்கும் விஷயமாக உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது.  டெல்டா வைரஸை விட வீரியம் அதிகம் கொண்ட இந்த வைரஸ், வேகமாக பரவும் என்று கருதப்படுவதால், இந்தியா மற்றும் இதர நாடுகளில் முன் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியாவில் முதன் முறையாக ஒமிக்ரான் தொற்று, கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இரண்டு பேருக்கு  ஏற்பட்டது கண்டறியபட்டது. அவர்களில் ஒருவர் அரசு மருத்துவர். அந்த மருத்துவரும் அவருடன் தொடர்பில் இருந்து ஐந்து பேரும் ஒரு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் அரசு மருத்துவர்கள் ஆவார்கள்.

மேலும், மருத்துவரின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளிட்ட இந்த ஆறு பேருக்கும், லேசான காய்ச்சல் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு பாராசிடாமல் மாத்திரைகள் அளிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். யாருக்கும் கொரோனா அறிகுறிகள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் 9 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான்-9 கர்நாடகா-2, மகாராஷ்டிரா-8, குஜராத், டெல்லியில் தலா ஒருவருக்கு என நாடு முழுவதும் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஓமிக்ரான் வைரஸ் பரவ தொடங்கிய முதல் மாநிலமான கர்நாடகாவில் உள்ள  சிக்மகளூர் மாவட்டத்தில் ஒரே பள்ளியில் 107 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிக்மகளூர் மாவட்டம் சீகோட்டில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: