மாப்பிள்ளை சம்பா புரொக்கோலி ஃப்ரைடு ரைஸ்

செய்முறை

சம்பா அரிசியுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உதிரியாக வேக வைத்து தனியே வைக்கவும். கடாயில் நெய் சேர்த்து சூடானதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். அதனுடன் நீளமாக நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட், புரொக்கோலியை சேர்த்து வதக்கவும். காய்கள் அரைப்பதம் வெந்தவுடன் அதனுடன் வேக வைத்த அரிசியைச் சேர்த்து மிளகுத்தூள், உப்பை சேர்த்து நன்கு பிரட்டவும்.
 
குறிப்பு:  ஃப்ரைடு ரைஸ் செய்யும்போது நறுக்கிய காய்கள் அதிகம் வேகவிடாமல் அரைப்பதம் வேக வைத்தாலே போதும். அதிகம் வேக வைத்த காய்களில் சத்துக்கள் அழிந்து விடும்.


Tags : Groom ,
× RELATED ம.பி.யில் திறந்தவெளி கழிப்பிடங்களை...