×

தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தென் தமிழ்நாடு மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழைக்கு வாய்ப்பிருக்கிறது. நெல்லை, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், திருச்சி, கரூர், திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல்லில் இன்று கனமழை பெய்யும். தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

நாளை தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும். டிசம்பர் 8ம் தேதி கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். டிசம்பர் 9ம் தேதி அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தூத்துக்குடியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் 10ல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்; நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.


Tags : Tamil Nadu ,Chennai Meteorological Center , tamilnadu,10 distict,heavy rain
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...