நாடு முழுவதும் அம்பேத்கரின் 65வது நினைவு தினம் அனுசரிப்பு!: டெல்லியில் குடியரசுத்தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி..!!

டெல்லி: டாக்டர் அம்பேத்கரின் 65வது நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மலர் மரியாதை செலுத்தினர். சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 65வது நினைவு தினத்தை ஒட்டி அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

தலைநகர் டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா, மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதுபோன்று நாடு நாடு முழுவதும் அம்பேத்கரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அவரது நினைவுகளை பலரும் புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 1891ம் ஆண்டு பிறந்த அம்பேத்கர், தனது 65வது வயதில் 1958ம் ஆண்டு மறைந்தார்.

Related Stories: