வேடந்தாங்கலில் ரூ.15 லட்சத்தில் புதிதாக ரேஷன் கடை திறப்பு: எம்பி, எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்

மதுராந்தகம், டிச. 6: வேடந்தாங்கல் ஊராட்சியில் ரூ. 15 லட்சம் செலவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடையை செல்வம் எம்பி, சுந்தர் எம்எல்ஏ ஆகியோர் திறந்து வைத்தனர். செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் வேடந்தாங்கல் ஊராட்சியில் உள்ள 5 கிராமங்களில் 5 ரேஷன் கடைகள் உள்ளன. ஆனால், சுமார் 34 ஆண்டுகளுக்கு முன்பு வேடந்தாங்கல் அமைந்துள்ள சரணாலயம் அமைந்துள்ள பகுதியில் ஒரு ரேஷன் கடை செயல்பட்டு வந்தது. பின்னர், வளையபுத்தூர் பகுதிக்கு மாற்றப்பட்டது. அதனால், வேடந்தாங்கல் மக்கள் நீண்ட தூரம் சென்று பொருட்களை வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இந்நிலையில், வேடந்தாங்கல் சரணாலயம் அருகே மீண்டும் முன்னாள் எம்எல்ஏ புகழேந்தி நிதியில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் புதிகாக கட்டிடம் ரேஷன் கடை நேற்று திறப்பு விழா நடந்தது.

இதில், அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய  திமுக செயலாளர் தம்பு தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் ஒரத்தி கண்ணன் முன்னிலை வகித்தார். முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் வேதாசலம் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ சுந்தர் மற்றும் எம்பி செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு ரேஷன் கடையை திறந்து வைத்தனர். முன்னாள் மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ புகழேந்தி, ஊராட்சி திமுக செயலாளர் வேணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

இதனை தொடர்ந்து, அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் வெளியம்பாக்கம், கீழ் அத்திவாக்கம், சிறுதாமூர் ஊராட்சிகளில் மழையால் பாதிக்கப்பட்ட 600க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எம்ஏ, செல்வம் எம்பி, அச்சிறுப்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் ஒரத்தி கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கினர். அப்போது, மாவட்ட கவுன்சிலர் வசந்தா கோகுலக்கண்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் வெளியம்பாக்கம் சிவகுமார், பார்த்தசாரதி, பொன்மலர் சிவகுமார், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More