வேலை வாய்ப்பு ஆபீசில் புதுப்பிக்க சிறப்பு சலுகை: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வௌியிட்ட அறிக்கை: கடந்த 2014, 2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை மற்றும் 2017, 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவுகளில் ஏற்கனவே வழங்கப்பட்ட கால அவகாசம் முடிந்த நிலையில், மேலும் மூன்று மாதங்கள் சிறப்பு புதுப்பித்தல் சலுகை தமிழக அரசின் அரசாணை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு வாயிலாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணையில் தெரிவித்தவாறு சலுகையை பெற விரும்பும் பதிவுதாரர்கள் மார்ச் 1ம் தேதிக்குள் இணையம் வாயிலாக தங்கள் பதிவினை புதுப்பித்து கொள்ளலாம். அவ்வாறு இணையம் வாயிலாக பதிவினை புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரிலோ பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம். இணையம் மூலமாக புதுப்பித்தல் மேற்கொள்ளும்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் //tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி மார்ச் 1ம் தேதி வரை தங்களது பதிவினை புதுப்பித்துக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: