ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பாஜ நிச்சயம் கவிழ்க்காது. மக்கள் ஆசியுடன் நாங்கள் ஆட்சி அமைப்போம். :- உள்துறை அமைச்சர் அமித்ஷா
அடுத்த மக்களவை தேர்தலில் காங்கிரசால் 300 இடங்களை பிடிக்க முடியாது. அப்படி நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தோன்றவில்லை. :- காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்
2023 சட்டப்பேரவை பொது தேர்தல் வரை கர்நாடக முதல்வர் பதவியில் பசவராஜ் பொம்மை நீடிப்பார். இதில் எந்த மாற்றமும் கிடையாது. :- ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
ஒன்றிய பாஜ அரசு அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படைகளை தகர்த்தும், சிறுமைப்படுத்தியும் வருகிறது. :- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்