தலைமறைவான மாவோயிஸ்ட் கைது

தேனி: தேனி மாவட்டம், வருசநாடு வனப்பகுதியில் 2007ல் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நொண்டி  மகாலிங்கம் உள்பட 5 மாவோயிஸ்ட்களை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்களில் 2009ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் கச்சார் மாவட்டத்தைச் சேர்ந்த யோகேஷ் மதன் (34) என்பவர் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் 2011ம் ஆண்டு முதல் தலைமறைவானார். இவரை கியூ பிராஞ்ச் போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் சென்னை கியூ பிரிவு போலீசார், மகாராஷ்டிரா சென்று த மாவோயிஸ்ட் யோகேஷ் மதனை கைது செய்து தமிழகம் அழைத்து வந்தனர்.  இதனைத் தொடர்ந்து நேற்று தேனியில் உள்ள க்யூ பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு யோகேஷ் மதனை கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இதன் பின் அவரை தேனி  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்பு தேனி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Related Stories:

More