சாத்தான்குளம் அருகே நாயை அடித்துக் கொன்ற இருவர் கைது

சாத்தானகுளம்:  தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் மூவர் சேர்ந்து கொடூரமாக தெரு நாய் ஒன்றை கம்பால் தாக்கி கொல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதை பார்த்த எஸ்.பி. ஜெயக்குமார், இதில் ஈடுபட்டவர்களை கைது செய்ய போலீசாருக்கு  உத்தரவிட்டார். விசாரணையில், சாத்தான்குளம்  அருகே பேய்க்குளத்தை சேர்ந்த சுந்தரம்(30) என்பவர் வளர்த்து வந்த ஆடுகளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்பகுதியைச் சேர்ந்த தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சுந்தரம், அவரது நண்பர்களான இசக்கிமுத்து, குமாருடன் சேர்ந்து   தெரு நாயை கம்பு மற்றும் கல்லால் அடித்துக் கொன்றது தெரியவந்தது. சாத்தான்குளம் சுந்தரம், இசக்கிமுத்துவை கைது செய்தனர். குமாரை தேடி வருகின்றனர்.

Related Stories:

More