நெல்லையில் மின்னல் தாக்கி 2 பெண்கள் பலி

நெல்லை: மேலப்பாளையம் அருகேயுள்ள நடராஜபுரத்தைச் சேர்ந்த முருகன் மனைவி பாலேஸ்வரி (30), மற்றொரு முருகன் மனைவி முத்துமாரி (35) மற்றும் வள்ளியம்மாள் (61) ஆகிய மூன்று பேரும் நேற்று மாலை மேலப்பாளையம் கருங்குளம் அருகேயுள்ள வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய துவங்கியது. இதில் பாலேஸ்வரி, முத்துமாரி, வள்ளியம்மாள் ஆகியோரை திடீரென மின்னல் தாக்கியது.

இதில் சம்பவ இடத்திலேயே பாலேஸ்வரி, முத்துமாரி ஆகியோர் இறந்தனர். படுகாயத்துடன் இருந்த வள்ளியம்மாளை அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையறிந்து அங்கு வந்த மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி பாலஸே்வரி, முத்துமாரி ஆகியோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories:

More