படப்பிடிப்பில் பைக் மோதி நடிகை படுகாயம்

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா நியூ டவுன் பகுதி சுற்றுச்சூழல் பூங்கா அருகில், நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் வெப் சீரிஸ் படப்பிடிப்பு நடந்தது. அப்போது அதிவேகமாக நுழைந்த பைக் அங்குள்ள உபகரணங்கள் மீது மோதியதில், அங்கு நின்றிருந்த நடிகை பிரியங்கா சர்க்கார், நடிகர் அர்ஜூன் சக்ரபோர்த்தி இருவரும் கீழே விழுந்தனர். விபத்து ஏற்படுத்திய நபர் அங்கு நிற்காமல் தப்பி சென்றுவிட்டார். விபத்தில் சிக்கிய பிரியங்கா சர்க்கார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கால்கள் மற்றும் இடுப்பில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், எலும்பில் உள்காயம் ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து கொல்கத்தா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: