இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து 14 பேர் பலி

ஜகர்தா: இந்தோனேசியாவின்  கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள லும்ஜங் மாவட்டத்தில் ‘செமெரு’ என்ற எரிமலை அமைந்துள்ளது.  3,676 மீட்டர் உயரம் கொண்ட இந்த எரிமலையில் இருந்து நேற்று முன்தினம் முதலில் லேசாக புகை கிளம்பியது. பின்பு எரிமலை வெடித்து, அதன் சாம்பல் வானுயர சென்று, பல கிமீ தூரத்துக்கு படர்ந்தது. இதில், அருகில் இருந்த 11 கிராமங்கள் பாதிக்கப்பட்டன. வீடுகள் சாம்பலில் புதைந்தன. பல வீடுகள் இடிந்தன.   பாலம் ஒன்றும் பிளந்தது. இந்த சம்பவங்களில் 14 பேர் பலியாகி உள்ளனர். மேலும், பலரை காணவில்லை. கால்நடைகளும் சாம்பலில் புதைந்து மடிந்துள்ளன. அங்கு மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Related Stories: