அஜித் குமாரின் வலிமை 2வது பாடல் வெளியீடு

சென்னை: அஜித் குமார், ஹுமா குரேஷி, யோகி பாபு, சுமித்ரா நடித்துள்ள ‘வலிமை’ படம், வரும் பொங்கல் பண்டிகையையொட்டி தியேட்டர்களில் வெளியாகிறது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஏற்கனவே ‘நாங்க வேற மாறி’ என்ற முதல் பாடல் வெளியிடப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை 2வது பாடல் வெளியிடப்பட்டது. அம்மா சென்டிமெண்ட் பாடலான இது, ‘நான் பார்த்த முதல் முகம் நீ. நான் கேட்ட முதல் குரல் நீ’ என்று அஜித் பேசும் வசனத்துடன் தொடங்குகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுத, சித்ஸ்ரீராம் பாடியுள்ளார். படத்தில் அஜித்தின் அம்மாவாக சுமித்ரா நடித்துள்ளார். ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ ஆகிய படங்களை தொடர்ந்து அஜித், இயக்குனர் எச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3வது முறை இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More