மீண்டும் நடிக்க வரும் ரீமா சென்

சென்னை: திருமணத்துக்கு பிறகு நீண்ட இடைவெளி விட்டு மீண்டும் நடிக்க வர ரீமா சென் முயற்சி மேற்கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் தூள், பகவதி, செல்லமே, ஆயிரத்தில் ஒருவன் உள்பட பல படங்களில் நடித்தவர் ரீமா சென். கடந்த 2012ல் ஷிவ் கரண் சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டில் ஆனார். அதன் பிறகு ரீமா சென் படங்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய அவர், அந்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். தனது மகன் வளர்ந்துவிட்டதால், மீண்டும் நடிக்க வருவதற்கான முயற்சிகளில் ரீமா சென் ஈடுபட்டுள்ளாராம்.

Related Stories:

More