தெலங்கானா அமைச்சருடன் திரையுலகினர் சந்திப்பு

ஐதராபாத்: தியேட்டர் டிக்கெட் கட்டண விவகாரம் தொடர்பாக தெலங்கானா மாநில அமைச்சருடன் தெலுங்கு திரையுலகினர் சந்திப்பு நடத்தினர். ஆந்திரா, தெலங்கானா என மாநிலங்கள் பிரிந்த பிறகு, இரு மாநில வியாபாரத்தை தெலுங்கு சினிமா நம்பியுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் ஆந்திராவில் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டது. அத்துடன் தியேட்டர்களில் பகல் காட்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் கூறிவந்தனர்.

இதுபோன்ற மாற்றங்களை தெலங்கானா மாநிலத்தில் கொண்டு வரக்கூடாது என்று வலியுறுத்தி, இயக்குனர்கள் ராஜமவுலி, திரி விக்ரம், தயாரிப்பாளர் கள் தில் ராஜு, தனய்யா உள்பட பலர், தெலங்கானா மாநில அமைச்சர் தலசானி சீனிவாச யாதவ்வை சந்தித்தனர். அப்போது, ஆந்திராவை போல் திரையுலகில் மாற்றம் கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

Related Stories:

More