எழும்பூர்-மும்பை எக்ஸ்பிரஸ் இனி தினமும் இயங்கும்

சென்னை: சென்னை எழும்பூருக்கும், மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையத்துக்கும் (சிஎஸ்எம்டி) இடையே 22157/22158 மும்பை- சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் வாரம் 3 முறை இயக்கப்படுகிறது. இது இந்த மாதம் 12ம் தேதி சிஎஸ்எம்டி-யில் இருந்தும், 15ம் தேதி முதல் சென்னை எழும்பூரில் இருந்தும் தினமும் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. தினமும் இயக்கப்பட்டாலும் முன்பு நிறுத்தப்பட்ட ரயில் நிலையங்களில்தான் இந்த எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லும்.

Related Stories:

More