அதிகாலையில் வீடு புகுந்து தொழிலதிபர் காரில் கடத்தல்: மர்ம கும்பலுக்கு வலை

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (30). தொழிலதிபரான இவர், சென்னை, காஞ்சிபுரம், நெல்லை உள்பட 10 இடங்களில் கோல்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில், இவரது வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டது. இதையடுத்து, ராஜசேகர் வீட்டின் கதவை திறந்தார். அப்போது, பட்டாகத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 10 பேர் வீட்டிற்குள் நுழைந்தனர். பின்னர் அவர்கள், ராஜசேகருடன் தகராறில் ஈடுபட்டு, கத்தி முனையில் வலுக்கட்டாயமாக அவரை காரில் ஏற்றி, கடத்தி சென்றனர்.

இதுபற்றி அவரது மனைவி உஷா, திருமங்கலம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில், ராஜசேகரை 10 பேர் காரில் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, ராஜசேகரின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, காஞ்சிபுரத்தில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட போலீசாருக்கு, தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், காஞ்சிபுரம் போலீசார், ராஜசேகரின் செல்போன் சிக்னலை வைத்து, அவர் அடைத்து வைக்கப்பட்டு உள்ள இடம் மற்றும் 10 பேர் கொண்ட மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

Related Stories: