சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் போலீசார் குவிப்பு

சென்னை: பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து சோதனை நடத்தினர். அதன்படி நேற்று சென்ட்ரல், ரயில் நிலையத்தில் டி.எஸ்.பி முத்துகுமார் மேற்பார்வையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எழும்பூர் ரயில் நிலையத்தில் டி.எஸ்.பி ஸ்ரீகாந்த் தலைமையில் எழும்பூர், மாம்பலம், தாம்பரம் நிலையங்களில் 120க்கும் மேற்பட்ட ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பயணிகள் நடைமேடை, காத்திருப்பு அறை ஆகியவற்றில் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை செய்தனர். ரயில்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் சோதனை செய்தனர்.

Related Stories:

More