நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 21-ஆக அதிகரிப்பு: இன்று ஒரே நாளில் 17 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி..!

ஜெய்ப்பூர்: இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21-ஆக அதிகரித்துள்ளது. உலகின் பல நாடுகளில் வேகமாக பரவிவரும் ஒமிக்ரான் வைரஸ், இந்தியாவிலும் மெதுவாக பரவி வருகிறது. ஒமிக்ரான் நோய் பாதிப்பு நாடுகளில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும், ஒன்றிய அரசு உத்தரவிட்டு இருக்கிறது. அதன்படி மாநிலங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன. அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட ஒமிக்ரான் வைரஸ் பரவிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

இவர்களில் தொற்று பாதிப்பு இருப்பவர்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். ஒமிக்ரான் வகை என உறுதியானதால் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வர வேண்டுமென ஒன்றிய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கிடையே, இந்தியாவில் 5 பேருக்கு ஒமிக்ரான் தொற்று நேற்று உறுதியாகி இருந்தது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கும், ராஜஸ்தானில் 9 பேருகும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று ஒமிக்ரான் பாதிப்பு உறுதியான 7 பேரில் 4 பேர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்தவர்கள், எஞ்சிய 3 பேர், வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று வந்தவர்களுடன் தொடர்புடையவர்கள் ஆவர். ராஜஸ்தான்- 9, கர்நாடகா-2, மகாராஷ்டிரா-8, குஜராத், டெல்லியில் தலா ஒருவருக்கு என நாடு முழுவதும் 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Related Stories: