உ.பி-யில் பாஜகவுக்கு கங்கனா பிரசாரம்?

மதுரா: சர்ச்சை கருத்துகளை அவ்வப்போது பேசிவரும் பாலிவுட் நடிகை கங்கனா, கடந்த சில நாட்களுக்கு முன் சண்டிகருக்கு காரில் சென்ற போது அவரை பஞ்சாப்பை சேர்ந்த சில விவசாய அமைப்புகள் தடுத்தி நிறுத்தி கோஷங்கள் எழுப்பின. சீக்கியர்களுக்கு எதிராகவும், விவசாய போராட்டங்களை கொச்சைபடுத்தியதற்காவும் அவர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் போலீசார் தலையிட்டு நிலைமையை கட்டுக் கொண்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள  ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமியை தரிசிப்பதற்காக கங்கனா வந்தார். கோயில் தரிசனத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்த கங்கனாவிடம், ‘உத்தரபிரதேசத்தில் அடுத்தாண்டு நடக்கும் பேரவை தேர்தலில் ஆளும் பாஜகவுக்காக பிரசாரம் செய்வீர்களா?’ என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த கங்கனா, ‘நான் எந்த கட்சியையும் சேர்ந்தவள் அல்ல; தேசத்தின் நலனுக்காக சிந்திக்கும் தேசியவாதிகளின் பக்கம் நிற்பேன்.

நான் கூறும் கருத்துகளை நேர்மையானவர்கள், துணிச்சலானவர்கள், ேதசியவாதிகள், நாட்டின் நலன்கருதி பேசுபவர்கள் ஏற்பார்கள் என்று நம்புகிறேன். சண்டிகரில் எனது காரை மறித்த விவகாரத்தில், எனது எதிர்ப்பை தெரிவித்தேன்’ என்றார்.

Related Stories: