வேலூர் சைதாப்பேட்டையில் புறக்காவல் நிலையம் துவக்கம்

வேலூர்: வேலூர் சைதாப்பேட்டை பில்டர்பெட் சாலை, முருகன் கோயில் தொடங்கி லாங்கு பஜார் வரையிலான மெயின் பஜார் சாலை, காகிதப்பட்டறை, சைதாப்பேட்டை மலையடிவாரம் என சைதாப்பேட்டையில் கஞ்சா விற்பனையுடன், அடிதடி, கோஷ்டி மோதல், கொலை, வழிப்பறி என பல்வேறு குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதாகவும், இது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து எஸ்பி ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில் முருகன் கோயில் அருகில் மெயின் பஜார் சாலை துவக்கத்தில் புறக்காவல் நிலையம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இங்கு 24 மணி நேரமும் தொடர்ந்து காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும் அங்கு தொடர் இரவு ரோந்துக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. புறக்காவல் நிலையத்தை ஏஎஸ்பி ஆல்பர்ட்ஜான் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். வடக்கு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உட்பட காவலர்கள், அப்பகுதி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: