ஆலு டிக்கி

செய்முறை :

உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும். இதனுடன் எல்லா மசாலாக்களையும் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும். பிறகு சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி வடைபோல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இல்லை என்றால் தவாவிலும் இரண்டு புறம் எண்ணெய் சேர்த்து பொரிக்கலாம். பொரித்த டிக்கியை தனியே எடுத்து வைக்கவும். ஒரு தட்டில் டிக்கியை ஒவ்வொன்றாக அடுக்கி அதன் மேல் புளிச் சட்னி, புதினா சட்னி தயிர் சேர்க்கவும். அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி தழையை சேர்த்து அலங்கரிக்கவும். தேவைப்பட்டால் ஓமப்பொடியையும் சேர்த்துக் கொள்ளலாம். சுவையான ஆலு டிக்கி தயார்.

Tags :
× RELATED மாங்காய் மசாலா பப்பட்