9ம் வகுப்பு மாணவி 4 மாதம் கர்ப்பம்: சித்தப்பா மீது போலீசில் புகார்

சூலூர்: கோவை மாவட்டம் சூலூர் அடுத்த அரசூர் பகுதியை சேர்ந்தவர் 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி. இவருக்கு நேற்று முன்தினம் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் சிறுமியை கோவை அரசு மருத்துமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது, சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது, அதே பகுதியை சேர்ந்த 37 வயது சித்தப்பா தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து சூலூர் போலீசில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர். சித்தப்பாவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது.

Related Stories: