ஷூட்டிங் ஸ்பாட்டில் பைக் மோதியதில் நடிகையின் கால், இடுப்பு எலும்பு முறிவு?

கொல்கத்தா: ெகால்கத்தாவில் நடந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் பைக் மோதிய விபத்தில் நடிகையின் கால், இடுப்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் நியூ டவுன் பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா அருகே நேற்று காலை 11 மணியளவில் வெப் சீரிஸ் ஒன்றுக்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த பகுதிக்குள் ஒரு பைக் ஒன்று அதிவேகமாக நுழைந்தது.

அடுத்த சில நொடிகளில் ஷூட்டிங் பகுதியில் வைக்கப்பட்டிருந்த உபகரணங்கள் மீது மோதியதில், அப்பகுதியின் நின்றிருந்த நடிகை பிரியங்கா சர்க்கார், நடிகர் அர்ஜூன் சக்ரபோர்த்தி ஆகியோர் கீழே விழுந்தனர். விபத்தை ஏற்படுத்திய நபர், அந்த இடத்தில் நிற்காமல் வந்த வேகத்தில் பைக்கில் தப்பிவிட்டார். இந்த விபத்தில் காயமடைந்த நடிகை பிரியங்கா, அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் பைபாஸ் பகுதியில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

பிரியங்காவின் கால்கள் மற்றும் இடுப்பில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு எலும்பில் உட்காயம் ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை நடத்த வேண்டியுள்ளதாக மருத்துவமனையின் வட்டாரங்கள் தெரிவித்தன. அதேநேரம் லேசான காயங்களுடன் முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு அர்ஜுன் சக்ரபோர்த்தி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து கொல்கத்தா போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More