தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்: மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் டெல்லி சென்றுள்ளதாக தகவல்

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்,ரவி திடீர் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். சென்னையில் இருந்து இன்று காலை கோவைக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கோவைக்கு விமானத்தில் செல்வதாக இருந்தது. அப்பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது என விமானநிலைய வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. சென்னையில் இருந்து இன்று காலை 10.10 மணியளவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி விமானத்தில் கோவைக்கு செல்ல முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் தமிழக ஆளுநர் ரவி திடீர் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இருந்த நிலையில் அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றார். நாகலாந்தில் 13 பேர் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க டெல்லி பயணம் என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர் டெல்லியில் ஓரிரு நாட்கள் தங்கியிருந்து சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

Related Stories: