ஆலங்குடி அருகே ரூ.2.13 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருள் பறிமுதல்: வாலிபர் கைது

ஆலங்குடி: ஆலங்குடி அருகே ரூ.2.13 லட்சம் மிதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வாலிபர் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள கலிபுல்லா நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது அப்துல்லா என்பவரது மகன் பக்கீர் முகமது (26). இவர் விற்பனைக்காக தனது வீட்டில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக ஆலங்குடி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தொடர்ந்து ஆலங்குடி போலீசார் மேற்கொண்ட சோதனையில் பக்கீர் முகமது வீட்டில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2.13 லட்சம் மதிப்பிலான 66 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஆலங்குடி போலீசார் பக்கீர் முகமதுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories:

More