ஆற்காடு அருகே 25 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய மோசூர் ஏரி

ஆற்காடு:  ஆற்காடு அருகே 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஏரி நிரம்பிகோடி போவதை  முன்னிட்டு பொதுமக்கள் சிறப்பு பூஜை செய்து கொண்டாடினார்கள். ராணிப்பேட்டை மாவட்டத்தில்  தொடர் கனமழை பெய்தது. இதனால், 369 ஏரிகளில் 311 க்கும் மேற்பட்ட ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளது. மேலும் பல ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. திமிரி அருகே உள்ள மோசூர்  ஏரி 25 ஆண்டுக்குப் பிறகு முழுவதும் நிரம்பி தண்ணீர் கோடி போய் கடை வாசல் வழியாக வெளியேறுகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து கடைவாசல் பகுதியில் தண்ணீரில்  மலர்தூவி தேங்காய் உடைத்து பூசணிக்காய் சுற்றி சிறப்பு பூஜை செய்தனர். 25 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பி உள்ளதால் நீர்வரத்து கால்வாய்களில்  உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More