பெரம்பலூர் மாவட்டத்தில் 190 இடங்களில் ஒரே நாளில் 13,513 பேர்களுக்கு கொரோனா தடுப்பூசி

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று நடந்த 13வது கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்களில் 13,513 பேர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் 13வது கட்டமாக நேற்று 190 இடங்களில் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திடும் வகையில் பொதுசுகாதாரத் துறை பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 600க்கும் மேற்பட்ட பேர் பொது மக்களை ஒருங்கிணைத்து கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்களில் பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 4,550 பேர்களுக்கும், ஆலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 2,834 பேர்களுக்கும், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 3166 பேர்களுக்கும், வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 2963 பேர்களுக்கும் என பெரம்பலுர் மாவட்டத்தில் மொத்தம் 13,513 பேர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

முன்னதாக பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறை மங்கலம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பெரம்பலூர் வடக்கு அரசு துணை சுகாதார நிலையம் ஆகிய பகுதிகளில் பகுதி அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு தடுப்பூசி மையங்களை மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் குமரிமன்னன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories:

More