திருச்சி அருகே எஸ்எஸ்ஐ கொலை போல் மீண்டும் பயங்கரம்; போலீஸ் நிலையத்தில் எஸ்ஐயை கத்தி வீசி கொல்ல முயற்சி; வாலிபர் பிடிபட்டார்: 3 பேர் தப்பி ஓட்டம்

திருவெறும்பூர்: தோகூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளரை கத்தி வீசி கொல்ல முயன்ற 4 விசாரணை கைதிகளில் 3 பேர் தப்பி ஓடினர். ஒருவரை கல்லணை பொதுமக்கள் துணையுடன் தோகூர் போலீசார் கைது செய்தனர். திருச்சி அடுத்த கல்லணை பாலத்தில் நேற்று இரவு தோகூர் சப் இன்ஸ்பெக்டர்கள் அய்யா பிள்ளை, வேல்முருகன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக கோவிலடி பகுதியில் கல்லணை புது பாலம் ஏறும் பகுதியில் ஒரு ஸ்கூட்டியில் 4 பேர் சுற்றி திரிந்துள்ளனர். அவர்களை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் போதையில் இருப்பது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து 4 பேரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

இதில் அவர்கள் பெல்டவுன்ஷிப் பகுதியை சேர்ந்த தர் மகன் நரேஷ்ராஜு (28), துவாக்குடி அண்ணாவளைவு பகுதியை சேர்ந்த ஜான் போஸ்கோ மகன் ரூபன்(21), இந்திரா தெருவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் வினீத் (21), அண்ணா வளைவை சேர்ந்த பாண்டியன் மகன் சாந்தகுமார்(21)என்பது தெரிய வந்தது. மேலும் 4 பேரும் லால்குடி அருகே உள்ள அரியூர் பகுதிக்குச் சென்று விட்டு வந்ததாகவும் கூறி உள்ளனர். இந்நிலையில் போலீசார் அவர்களது செல்போனைவாங்கி பார்த்துக்கொண்டிருந்தபோது மொபட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து ஐயா பிள்ளை மீது வீசி உள்ளனர். அதிர்ஷ்டவசமாக மற்ற காவலர்கள் உடனடியாக கதவை இழுத்து சாத்தியதால் நான்கு பேரும் தப்பி ஓடி உள்ளனர்.

இந்த நிலையில் தப்பி ஓடிய 4 பேரை தோகூர் போலீசார் கல்லணை பொது மக்கள் உதவியுடன் தேடிவந்த நிலையில் நரேஷ்ராஜூ காவல் நிலையத்தில் நின்ற அவர்களின் மொபட் வண்டியை எடுக்க வந்த பொழுது கல்லணை மக்கள் உதவியுடன் தோகூர் போலீசார் நரேஷ்ராஜுவை கைது செய்தனர். இவர் பிபிஏ பட்டதாரி ஆவார். அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அந்த வண்டியில் இருந்து 3 ஆடு உரிக்கும் கத்தி போல் உள்ள வாள்களை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மூன்றுபேரும் இரும்பு ராடு மற்றும் வாளுடன் தப்பி சென்று விட்டனர்.

அதனை தொடர்ந்து அவர்களது பெற்றோருக்கு தோகூர் போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து நரேஷ்ராஜூவின் பெற்றோர், வினித் தாய் தோகூர் காவல் நிலையம் வந்தனர்.தோகூ அவர்களிடமும் தோகூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆடு திருடர்களால் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் படுகொலை செய்யப்பட்ட நிலையில் தோகூர் போலீசார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: