ஆலங்காயம் காப்புக்காட்டில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்

ஆலங்காயம்: ஆலங்காயம் காப்புக்காட்டில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆலங்காயம் வனச்சரகத்திற்கு உட்பட்ட காப்புக்காட்டில் வனச்சரக அலுவலர் ஆறுமுகம் தலைமையிலான வனத்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், பீமகுலம் அடுத்த சின்னராஜ் வட்டம் பகுதியை சேர்ந்த காசி(62), யுவராஜ்(43) என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் காட்டுப்பன்றியை வேட்டையாடி உணவு சமைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் ராஜ்குமார் உத்தரவின்பேரில், வனச்சரக அலுவலர் ஆறுமுகம் தலா ரூ.15 ஆயிரம் வீதம் இருவருக்கும் சேர்த்து ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தார்.

Related Stories:

More