மழையால் பாதிக்கப்பட்ட ராமநாதபுரம் கிராம மக்களுக்கு சொந்த செலவில் நிவாரணம்; பஞ். தலைவர் மகேந்திரா வழங்கினார்

சிவகிரி: மழையால் பாதிக்கப்பட்ட ராமநாதபுரம் கிராம மக்களுக்கு தனது சொந்த ெசலவிலான நிவாரணப் பொருட்களை ஊராட்சி தலைவர் வக்கீல் மகேந்திரா வழங்கினார். வாசுதேவநல்லூர் அருகே தொடர் மழையால் பாதிக்கப்பட்ட ராமநாதபுரம் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி வாசுதேவநல்லூர் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. இதில் தொடர்மழையால் பாதிக்கப்பட்ட ராமநாதபுரம் கிராமம், இந்திரா காலனி, மேட்டுப்பட்டி, அம்பேத்கர் நகர் பகுதிகளைச் சேர்ந்த 20 குடும்பங்களுக்கு அரிசி, காய்கனி, பலசரக்கு, வாளி போர்வை, பாய்  உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பொருட்களை வாசுதேவநல்லூர் பிடிஓக்கள் ஜெயராமன், வேலம்மாள் முன்னிலையில் ஊராட்சி தலைவர் வக்கீல் மகேந்திரா, தனது சொந்த செலவில் வழங்கினார். அப்போது மண்டல வளர்ச்சி அலுவலர் சசிகலா, துணைத்தலைவர் ஜோதி சரவணக்குமார், வார்டு உறுப்பினர்கள் ஜெய்கணேஷ், கலைச்செல்வி, ஊராட்சி செயலர் முருகராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: