கூட்டுறவு ரேஷன் கடை தொமுச புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து

நெல்லை: தமிழ்நாடு கூட்டுறவு நியாயவிலை கடை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் புதிய நிர்வாகிகள் வண்ணார்பேட்டையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வஹாப் எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

 அப்போது மாநகர செயலாளரான முன்னாள் எம்எல்ஏ ஏ.எல்.எஸ். லட்சுமணன், தொ.மு.ச. பொதுச் செயலாளர் தர்மன், மாவட்டச் செயலாளர் தமிழ்நாடு அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் கே.எம்.எஸ். முகமது சைபுதீன், மாவட்டத் தலைவர் மாடசாமி, மாவட்டச் செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன், மாவட்ட அமைப்புச் செயலாளர் இன்பரசு, மாவட்ட துணைத்தலைவர்கள் முருகன், நூர்முகமது, ஜெபா, மாவட்ட துணைச்செயலாளர்கள் முத்துகுட்டி, இசக்கியம்மாள், மதி மணிராஜன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories:

More