நெல்லை அருங்காட்சியகத்தில் பழங்குடி மக்களின் சிக்கிமுக்கி கல் சிறப்பு கண்காட்சி

நெல்லை: நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மாதம் தோறும் சிறப்பு பொருள்  குறித்த விளக்க கண்காட்சி நடத்தப்படுகிறது. டிசம்பர் மாத சிறப்பு கண்காட்சி  நேற்று துவங்கியது. இதில் பழங்குடி மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட  சிக்கிமுக்கி கல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

நெருப்பை உண்டாக்கும் இந்த  கல் சிலிக்கானிலால் ஆன ஒருவகை படிவப்பாறை ஆகும். கடினமான, படிகவடிவு  வெளித்தெரியாத  கனிம படிகக்கல்லின் படிவ வடிவமாக இது உருப்பெருகிறது.

பழை  கற்கால மனிதர்கள் இந்த கல்உராய்வதனால் நெருப்பு ஏற்படுவதை கண்டறிந்தனர்.  அதை வைத்து விலங்குகளை பயமுறுத்தியுள்ளனர். உணவு சமைத்தனர். தற்போது  அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சிக்கிமுக்கி கல் பழங்குடியின  மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். இதனை பொதுமக்கள், மாணவ மாணவிகள்  பார்த்து செல்கின்றனர். இந்த மாதம் முழுவதும் இக்கண்காட்சி தொடர்ந்து நடைபெறும் என  காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி தெரிவித்தார்.

Related Stories: