நெல்லை டவுன் ஜவகர் பள்ளிக்கு 10 செட் பெஞ்ச், டெஸ்க் அப்துல்வஹாப் எம்எல்ஏ வழங்கினார்

நெல்லை:  திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாள் விழாவையொட்டி  நெல்லை டவுன் ஜவகர் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 10 செட் பெஞ்ச் மற்றும் டெஸ்க் ஆகியவற்றை பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப் வழங்கினார்.

 நிகழ்ச்சியில் நெல்லை பகுதி திமுக செயலாளர்கள் கோபி என்ற நமசிவாயம், ரவீந்தர், வக்கீல் அணி மாவட்ட அமைப்பாளர் தினேஷ், மருத்துவர் அணி மாவட்ட அமைப்பாளர் டாக்டர் பொன்மணி, பொறியாளர் அணி மாநகர அமைப்பாளர் அருள்வின் ரொட்ரிகோ,  பொறியாளர் அணி சாய் பாபா, மீனவர் அணி துணை அமைப்பாளர்கள் சுரேஷ், செல்வின், தகவல் தொழில்நுட்ப அணி நெல்லை தொகுதி ஒருங்கிணைப்பாளர் காசிமணி, மாவட்டப் பிரதிநிதி ரைமண்ட், பகுதி துணை செயலாளர் ஸ்டார் முருகன், வட்டச் செயலாளர் மாரிமுத்து, டவுன் மகாராஜன், சுபகானி, அவைத் தலைவர் சுப்பையா, ஒன்றிய கவுன்சிலர்கள் காசிம், முகமது இஸ்மாயில், பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் செய்யது அலி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். தலைமை ஆசிரியை மாலா ஏற்புரை ஆற்றினார். உதவித் தலைமை ஆசிரியை ஜோஸ்பின் பனிமலர் நன்றி கூறினார்.

Related Stories:

More