சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் கடந்த 4 நாட்களாக நடத்திய சோதனையை நிறைவு செய்தது வருமான வரித்துறை.!

சென்னை: கடந்த 4 நாட்களாக சூப்பர்  சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது. தமிழகத்தின் பிரபல ஜவுளி நிறுவனமான சரவணா செல்வரத்னம்,  சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் சொந்தமான கடைகளில் 1-ம்தேதியில் இருந்து வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.

தி நகர், புரசைவாக்கம், போரூர், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்களில் நடந்த சோதனை நிறைவு பெற்றது. சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து, தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்ததாக வருமானவரித் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சென்னை தியாகராய நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூர் ஆகிய பகுதிகளில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர் கடைகளில் கடந்த புதன்கிழமை காலை 8.30 மணி முதல் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தது. இந்நிலையில், கடந்த 4 நாட்களாக சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை நிறைவு பெற்றது. இதுவரை நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்டவை குறித்த விவரங்களை இன்னும் அதிகாரிகள் விவரிக்கவில்லை.

Related Stories:

More