மீண்டும் பீதியை கிளப்பும் கொரோனா; உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 26.56 கோடியை தாண்டியது; 52.63 லட்சத்தை கடந்தது உயிரிழப்பு

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 5,23,950 பேர் புதிய தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,56,84,258 பேராக அதிகரித்துள்ளது. உலகம் மக்களை கடந்த 2 ஆண்டு காலமாக தனது கைப்பிடிக்குள் வைத்துள்ளது கொரோனா வைரஸ்.

உருமாறிய டெல்டா வகை கொரோனா தொற்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலக நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் டெல்டா கொரோனா பாதிப்பினால் தடுமாறி வருகின்றன. கடந்த சில மாதங்கள் கட்டுக்குள் இருந்த கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா ஒருபக்கம் பரவினாலும் குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது நம்பிக்கையை தருகிறது.

ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 3,76,200 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 23,93,50,562 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவால் ஒரே நாளில் 5,641 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் மரணமடைந்தோர் எண்ணிக்கை 52,63,719 பேராக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 492 பேர் மரணமடைந்துள்ளனர்.

Related Stories:

More