பெண்ணிடம் ஆபாச சைகை வாலிபர் கைது

துரைப்பாக்கம்: துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர் சித்ரா (34, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், நேற்று முன்தினம் வீட்டின் அருகே நின்றிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (25), சித்ராவிடம் ஆபாச சைகை காட்டி, கேலி கிண்டல் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சித்ரா, சதீஷ்குமாரை தட்டிக் கேட்டுள்ளார். அப்போது அவர், சித்ராவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதுகுறித்து கண்ணகி நகர் போலீசில் சித்ரா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சதீஷ்குமாரை நேற்று பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் மீது ஏற்கனவே திருட்டு மற்றும் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து சதீஷ்குமாரை பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: