தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 3 மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய சுகாதாரத்துறை கடிதம்

சென்னை: தமிழக சுகாதாரத்துறைக்கு ஒன்றிய சுகாதாரத்துறை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நவம்பர் மாதம் 3வது வாரங்களை விட கடைசி வாரத்தில் தொற்று அதிகரித்துள்ளது. தமிழக அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஒன்றிய அரசு வழங்கும். ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்படி விமான நிலையங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும்.

மேலும் வேலூர் மாவட்டத்தில் நவம்பர் இறுதியில் 93ஆக இருந்த தொற்று இம்மாத முதல் வாரத்தில் 128 ஆக அதிகரித்துள்ளது. எனவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இந்த 3 மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories: