தென் ஆப்ரிக்கா டூர் ஒரு வாரம் ஒத்திவைப்பு

ஒமிக்ரான் அச்சுறுத்தல் எழுந்துள்ள நிலையில், இந்திய அணியின் தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணம் டிச. 17ம் தேதிக்கு பதிலாக டிச.26ம் தேதி தொடங்கும் என்று பிசிசிஐ உறுதி செய்துள்ளது. கொல்கத்தாவில் நேற்று நடந்த 90வது பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையே 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன. 4 டி20 போட்டிகளுக்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

* இந்தோனேசியாவில் நடைபெறும்  பிடபுள்யூஎப் பைனல்ஸ் பேட்மின்டன் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட இந்தியாவின் பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார். அரையிறுதியில் ஜப்பானின் அகானே யாமகுச்சியுடன் நேற்று மோதிய சிந்து 21-19, 15-21, 21-15 என்ற செட் கணக்கில் வென்றார். இன்று நடைபெறும் பைனலில் கொரிய வீராங்கனை ஆன் சே யங்குடன் சிந்து மோதுகிறார்.

* இந்தியாவில் கிரிக்கெட் நடுவர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான ஓய்வு பெறும் வயது 60ல் இருந்து 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

* கோலாலம்பூரில் நடந்த ஆசிய ஸ்குவாஷ் குழு சாம்பியன்ஷிப் தொடரின் பைனலில் மலேசியாவுடன் மோதிய இந்தியா 1-2 என்ற கணக்கில் போராடி தோற்று வெள்ளிப் பதக்கம் பெற்றது.

* வங்கதேசத்துக்கு எதிராக தாக்காவில் நேற்று தொடங்கிய 2வது டெஸ்டில், டாஸ் வென்று பேட் செய்த பாகிஸ்தான் முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்துள்ளது (57 ஓவர்).

Related Stories:

More