ஒமிக்ரான் தொற்று பரவாமல் தடுக்க தமிழக எல்லைகளில் கண்காணிப்பை கடுமையாக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க மாநில எல்லைகளில் கண்காணிப்பை கடுமையாக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: `ஒமிக்ரான்’ எனப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று தென்ஆப்பிரிக்காவில் ஆரம்பித்து, பல நாடுகளுக்கு சென்று, தற்போது தமிழ்நாட்டின் அண்டை மாநிலமாக கர்நாடகாவிற்கே வந்துவிட்டது என்ற செய்தி ஒருவித அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தமிழக முதல்வர் இதில் தனி கவனம் செலுத்தி, வருமுன் காப்பதே சிறந்தது என்பதற்கேற்ப, சமூக இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து இடங்களிலும் பின்பற்றுமாறு தகுந்த அறிவுரைகளை வழங்கி, பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து அவர்கள் அதை செலுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் வழியாக வரும் வெளிநாட்டு பயணிகளை கண்காணிப்பதிலும், அண்டை மாநிலங்களின் எல்லைகளில் கண்காணிப்பை கடுமையாக்குவதிலும் எவ்வித சுணக்கமும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

More