தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு மற்றும் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.147.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 1010 சாலைகள் சீரமைக்கப்படும்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முதற்கட்டமாக தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டம் மற்றும் சிங்காரச் சென்னை2.0 திட்டத்தின் கீழ் ரூ.147.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 1010 சாலைகள் சீரமைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 25ம் நாள் வடகிழக்கு பருவமழை தொடங்கி மாநகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழைப்பொழிவு ஏற்பட்டது.  குறிப்பாக, நவம்பர் மாதத்தில் 6 மணி நேரத்திற்குள்ளாகவே 20 செ.மீ. அளவிற்கு கனமழை பெய்துள்ளது. தொடர் மழையால் மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் பள்ளங்களும், போக்குவரத்து சாலைகளில் குழிகளும் ஏற்பட்டது. சில சாலைகள் அதிகபாதிப்புக்குள்ளாகி உள்ளன.

 சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது.  அனைத்து மண்டலங்களிலும் மழை காரணமாக சேதமடைந்த பேருந்து சாலைகள், உட்புறச் சாலைகளை கணக்கெடுப்பு செய்ய சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி, துணை ஆணையர்கள், வட்டார துணை ஆணையர்கள், மண்டல அலுவலர்கள் மற்றும் செயற்பொறியாளர்களால் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு முதற்கட்டமாக 622 எண்ணிக்கையிலான உட்புற தார் சாலைகள், 307 எண்ணிக்கையிலான உட்புற கான்கிரீட் சாலைகள், 79 எண்ணிக்கையிலான பேருந்து சாலைகள், 2 சாலைகளில் நடைபாதைகள் சீரமைக்க வேண்டிய நிலையில் உள்ளன என திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

முதல்வர் ஆலோசனையின்படி, இதுகுறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்ட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் இந்தச் சாலைகளை சீரமைக்க தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.109.60 கோடி, சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் இருந்து ரூ.37.58 கோடி என மொத்தம் ரூ.147.18 கோடி  நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் மொத்தம் 1010 சாலைப் பணிகள் மேற்கொள்ள ஒப்பம் கோரப்பட்டுள்ளது. மேலும், பருவமழையின் காரணமாக சேதமடைந்த மேற்குறிப்பிட்ட சாலைகள் தவிர்த்து சேதமடைந்த பிற சாலைகளை கணக்கிடும் பணி வட்டார துணை ஆணையர்களின் மேற்பார்வையில் சம்பந்தப்பட்ட பொறியாளர்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்த திட்ட அறிக்கை பெறப்பட்டதும் அடுத்தக்கட்டமாக சாலைகளை சீரமைக்கும் பணிக்கான ஒப்பம் கோரப்படும்.சாலைப் பணிகளை மேற்கொள்ளும் போது பழைய சாலைகளை முழுவதுமாக அகழ்ந்தெடுத்து புதிய சாலைப் பணிகளை மேற்கொள்ளவும், ஒப்பந்தப்புள்ளிகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் இணையவழி ஒப்பங்களாக மட்டுமே, ஒப்பங்கள் இறுதி செய்யப்பட்டவுடன் உடனடியாக பணிகள் தொடங்கப்பட்டு சாலைப் பணிகளை விரைந்து முடித்திடவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு மேற்கொள்ளப்படும் சாலைப் பணிகளின் தரம் மாநகராட்சியால் நியமிக்கப்பட்டுள்ள கலந்தாலோசகர்கள் கொண்டு ஆய்வு செய்யப்படும்.

மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் கீழ்க்கண்ட

அட்டவணையில் உள்ளசாலைகள் சீரமைக்கப்பட உள்ளன

மண்டலங்கள்    உட்புற தார்சாலைகள்        உட்புற கான்கிரீட் சாலைகள்    பேருந்து சாலைகள்

        எண்ணிக்கை    மதிப்பீடு         எண்ணிக்கை    மதிப்பீடு        எண்ணிக்கை    மதிப்பீடு

                (ரூ.கோடி)                (ரூ.கோடி)                (ரூ.கோடி)    

திருவொற்றியூர்        14    0.9        2        0.07        1        0.59

மணலி            67    12.61        16        1.23        0        0.00   

மாதவரம்            51    5.30        15        0.80        1        0.90

தண்டையார்பேட்டை        108    9.41        65        4.02        0        0.00   

ராயபுரம்            30    2.75        6        0.63        7        2.89

திரு.வி.க.நகர்        60    5.88        52        4.04        7         2.84   

அம்பத்தூர்        65    9.54        4        0.23        2        1.40

அண்ணாநகர்        65    5.93        75        6.52        9        7.10   

தேனாம்பேட்டை        22    2.61        26        3.20        22 (2

                                        நடைபாதை    18.77

                                        உட்பட)        

கோடம்பாக்கம்        14    1.79        1        0.12        4        1.80   

வளசரவாக்கம்        47    3.13        0        0.00        0        0.00    

ஆலந்தூர்            14    1.17        17        0.58        6        2.12   

அடையாறு        15    1.38        0        21        15.54    

பெருங்குடி        31    3.46        21        2.55        0        0.00   

சோழிங்கநல்லூர்        19    1.45        7        0.93        1        1.00

மொத்தம்            622    67.31        307        24.92        81        54.95

Related Stories: