திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா!: 'பகல் பத்து'விழாவில் பவளமாலை அலங்காரத்தில் பெருமாள் பவனி..!!

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து நிகழ்ச்சின் முதல் நாளில் பவளமாலை அலங்காரத்தில் பெருமாள் பவனி நடைபெற்றது. புகழ்பெற்ற  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் 21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று தொடங்கியது. இதை தொடர்ந்து பகல் பத்து நிகழ்ச்சியின் முதல் நாளில் கவரிமான் சவரிகொண்டை, காசுமாலை, பவளமாலை அலங்காரத்துடன் புறப்பட்ட நம்பெருமாள், அர்ஜுன மண்டபம் சென்றடைந்தார்.

10 நாட்கள் நிகழ்ச்சியை தொடர்ந்து ராப்பத்து வைபவம், 14ம் தேதி சொர்க வாசல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. இதையடுத்து 23ம் தேதி தீர்த்தவாரியும், இதற்கு மறுநாள் நம்மாழ்வார் மோட்சம் என்ற நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவடைகிறது. கொரோனா பரவல் காரணமாக சில கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories:

More