திருமணம் செய்து கொள்ளாமல் தட்டிக்கழித்த பெண் இன்ஜினியரை அரிவாளால் வெட்டி கொன்ற அவரது சகோதரர்

ராமநாதபுரம்: திருமணம் செய்து கொள்ளாமல் தட்டிக்கழித்த பெண் இன்ஜினியரை அரிவாளால் வெட்டி கொன்ற அவரது சகோதரர் தலைமறைவாகியுள்ளார். ராமநாதபுரம் நேரு நகரில் வசிக்கும் செல்வம் என்பவரின் மூத்த மகள் சுவாதி, பொறியியல் பட்டம் படித்த இவருக்கு திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை பார்த்த நிலையில் மேல்படிப்பு படிக்கப்போவதாக கூறி தனக்கு திருமணம் வேண்டாம் என்று தடுத்துள்ளார்.

27 வயதான சுவாதி திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் அவருடைய தங்கைக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதையடுத்து சுவாதிக்கு திருமணம் செய்து வைக்க வீட்டில் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அப்போதும் திருமணம் செய்து கொள்ள மறுத்து தட்டி கழித்ததால் குடும்பத்தில் பிரச்சனை எழுந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சுவாதிக்கும் அவரது தம்பி சரண் என்ற சரவணகுமாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது வீட்டில் வேறு யாரும் இல்லாத நேரத்தில் சகோதரி என்றும் பாராமல் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு சரவணகுமார் தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்த ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் சுவாதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சரவணகுமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories:

More