கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமாகி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் நடிகர் கமல்ஹாசன்..!!

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் கமல்ஹாசன் பூரண குணமாகி மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்பியுள்ளார். நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் கொரோனா தொற்றில் இருந்து அவர் முற்றிலுமாக குணமடைந்துவிட்டதாகவும், எனினும் சில நாட்களுக்கு தனிமையில் இருப்பார் என்றும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. அத்துடன் அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் விரைந்து குணமடைய வேண்டி வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும். அவற்றையும் மீறி சுகம் கெட்டால் நாம் எடுத்த நடவடிக்கைகளே நம்பை விரைவில் குணப்படுத்தவும் கூடும் என குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்றுத் தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன என்றெண்ணியெண்ணி மகிழ்ந்து இருக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவமனை வாசம் முடித்து இன்று பணிக்கு திரும்பினேன்.

நலமாக இருக்கிறேன். என்னை தன் சொந்த சகோதரன் போல் கவனித்து சிகிச்சை அளித்த மருத்துவமனைக்கு நன்றி. நான் விரைந்து நலம் பெற் வேண்டுமென வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், நண்பர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகினர், விடுப்பை திறம்பட சமாளித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட விக்ரம் படக்குழு, பிக்பாஸ் குழுவினருக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய் தொற்றிலிருந்து நடிகர் கமல்ஹாசன் முழுமையாக குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். இனி வழக்கமான அவரது பணிகளை தொடரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More