நெல்லையில் ஏற்பட்ட சாலை விபத்தில் மருத்துவ கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

நெல்லை: நெல்லையில் ஏற்பட்ட சாலை விபத்தில் மருத்துவ கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். நெல்லை மாநகர பகுதியில் ரெட்டியார்பட்டி அருகே உள்ள நான்கு வழிசலையில் நெல்லையிலிருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த காரின் டயர் வெடித்து எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பெண்கள் மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

சம்பவ இடத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண்களும் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நான்காம் ஆண்டு படிக்கும் திவ்யபாலா மற்றும் காயத்திரி என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் திவ்யபாலா மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வரும் நிலையில் காயத்திரி, பிரிட்டோ ஏஞ்சல் மற்றும் கார் ஓட்டுநரான சண்முகசுந்தரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மருத்துவக்கல்லூரி மாணவிகள் எதற்க்காக அந்த பகுதிக்கு வந்தனர் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து ஏற்பட்ட பகுதியில் காவல்துறையினர் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் நெல்லை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

More