இந்தி நடிகர் மர்ம சாவு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் வெர்சோவா அடுத்த யாரி சாலையில் உள்ள வாடகை வீட்டில் பாலிவுட் நடிகர் பிரம்ம மிஸ்ரா என்று அழைக்கப்படும் பிரம்மஸ்வரூப் மிஸ்ரா (36) வசித்து வந்தார். இவர், ஹசீன் தில்ரூபா (2021), கேசரி (2019), சோர் சோர் சூப்பர் சோர் (2013) ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை அவர் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். தகவலறிந்த போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘நடிகர் பிரம்மஸ்வரூப் மிஸ்ரா கடந்த நான்கு ஆண்டுகளாக மேற்கண்ட குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதற்காக சிகிச்சையும் எடுத்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பே அவர் இறந்திருக்க வாய்ப்புள்ளது. குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அக்கம் பக்கத்தினர் எங்களுக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து விசாரிக்கிறோம்’ என்றனர்.

Related Stories: