கேத்ரினா திருமண விழாவுக்கு பிரச்னை

ஜெய்ப்பூர்: பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்னையால் விக்கி கவுஷல் - கேத்ரினா திருமண விழாவிற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் விக்கி கவுஷல், நடிகை கேத்ரினா கைப் ஆகியோருக்கு வரும் 7ம் தேதி முதல் 9ம் தேதிக்குள் திருமண சடங்குகள் நடக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. ராஜஸ்தானில் உள்ள சிக்ஸ் சென்ஸ் ஃபோர்ட் பர்வாராவில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

ஆனால், இந்த திருமண சடங்குகள் தொடர்பான நிகழ்ச்சி குறித்து சவாய் மதோபூர் மாவட்ட நிர்வாகம் ஆலோசனை நடத்தியது. மேலும் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பாலிவுட் பிரபலங்களின் திருமண விழா என்பதால், ஏராளமான பிரபலங்கள் வர வாய்ப்புள்ளது.

தற்போது ஒமிக்ரான் அச்சுறுத்தல் இருப்பதால் திருமண விழாவிற்கு அனுமதிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து இன்று சவாய் மதோபூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார். அநேகமாக கேத்ரினா கைப் திருமண சடங்கு விழாவிற்கான அனுமதி ரத்தாகும் என்றே

கூறப்படுகிறது.

Related Stories:

More