சமந்தா படத்தை கைப்பற்றிய நயன்தாரா

சென்னை: டாப்ஸி நடிப்பில் கேம் ஓவர் என்ற படத்தை இயக்கியவர் அஸ்வின் சரவணன். இந்த படத்துக்கு பிறகு சமந்தா நடிப்பில் ஒரு படத்தை இயக்க அவர் ஒப்பந்தமானார். இந்த படத்தின் கதையை கேட்டு, சமந்தாவும் இதில் நடிப்பதாக உறுதி அளித்தார். ஆனால், சில காரணங்களால் அந்த படம் தள்ளிப்போனது. இந்நிலையில் திடீரென நயன்தாரா நடிப்பில் கனெக்ட் என்ற படத்தை இயக்குவதாக அஸ்வின் சரவணன் அறிவித்துவிட்டார். அந்த பட விளம்பரமும் வெளியாகி, படப்பிடிப்பும் துவங்கிவிட்டது.

சமந்தாவுக்காக அஸ்வின் சரவணன் எழுதிய கதைதான் இந்த கனெக்ட் படம் என்றும் சமந்தாவுக்கு பதில் நயன்தாரா இதில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. சமந்தா நடிப்பதாக இருந்த இந்த படத்தின் கதையை அறிந்த நயன்தாரா, அஸ்வின் சரவணனை அழைத்து இதில் நடிக்க கால்ஷீட் கொடுத்துவிட்டாராம். இதனால்தான் அவசரமாக இந்த படத்தை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவனே தயாரிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

Related Stories:

More