மஞ்சள் மகிமை!

நன்றி குங்குமம் தோழி

*மஞ்சள் கிழங்கில் மூன்று வகைகள் உண்டு. முதல் வகை முகத்திற்குப் போடும் மஞ்சள். இதை முட்டா மஞ்சள் என்பார்கள். உருண்டையாக இருக்கும்.

* இரண்டாம் வகை கஸ்தூரி மஞ்சள். வில்லை வில்லையாகத் தட்டையாக வாசனையாக இருக்கும்.

* மூன்றாவது வகை நீட்ட நீட்டமாக இருக்கும். விரல் மஞ்சள் என்று பெயர். கறிமஞ்சள் இதுதான்.

* முகத்திற்குப் பூசும் மஞ்சள் முகத்தில் முடி வளராமல் தடுக்கிறது. முகத்திற்கு ஒருவித மினுமினுப்பை மற்றும்  வசீகரத்தைத் தருகிறது. மிகவும் மங்களகரமானது இந்த மஞ்சள்.

* இரண்டாவது வகையான கஸ்தூரி மஞ்சள் வாசனை மிகுந்தது. வாசனைப் பொடிகளிலும், வாசனைத் தைலங்களிலும் இதைச் சேர்த்து வருகிறார்கள்.

* மூன்றாவது ரகமான விரல் மஞ்சள்தான் சமையலறையின் முதற்பொருள். இந்த மஞ்சளுக்குக் கிருமிகளை அழிக்கும் சக்தி இருக்கிறது.

* மூக்கடைப்பு ஏற்பட்டவர்கள் மூர்ச்சை போட்டு விழுந்தவர்களுக்கு மஞ்சளைச் சுட்டு அந்தப் புகையை மூக்கில் காட்டினால், தெளிவு ஏற்படும்.

* வேனல் கட்டி, நகச்சுத்தி, அடிபட்ட இடத்தில் ஏற்படும் வீக்கம் இவைகளுக்கு மஞ்சளை அரைத்து மாவுடன் கலந்து கிளறிச் சூடாக அடிபட்ட இடங்களில் பத்துப் போட்டால் குணமாகும்.

* நுண்ணுயிர்கள், நோய்க்கிருமிகள் அழிப்பது மட்டும் இல்லாமல் சரும சம்மந்தமான நோய்களை தீர்க்கும்.

* உடலில் உஷ்ணத்தை ஏற்படுத்தி வாயுவை வெளியேற்றும். வயிற்றுப்புழு, பூச்சிகளை அழித்து, மூலநோயை கட்டுப்படுத்தும். பித்தத்தை நீக்கும்.

* புதிய மஞ்சள் கிழங்கிலிருந்து ஒருவகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. பித்த நோய்க்கு இந்த எண்ணெய் பயன்படுகிறது.

தொகுப்பு: ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.

 

வீட்டிலேயே இருக்கு மருத்துவம்!

* கடுக்காய்: கிராம்பு - 1 கிராம், கடுக்காய் - 6 இரண்டையும் தூளாக்கி நான்கு அவுன்ஸ் தண்ணீர் விட்டு 10 நிமிடம் வேக வைத்து வடிகட்டி ஆறினவுடன் ஒரே தடவை பருக வேண்டும். மலச்சிக்கல் நீங்கி நன்றாக பேதியாகும். உடல் லேசாகி, பல நோய்கள் தீரும்.

* மாசிக்காய்: இரண்டு மாசிக்காய்களை தூளாக்கி  100 மில்லி தண்ணீர் ஊற்றி  காய்ச்சி ஆறினவுடன் வடிகட்டி தேன் கலந்து ஒரு நாளைக்கு 3 வேளை சாப்பிட்டால் தீராத வயிற்றுக்கடுப்பு நோயும் தீரும்.

* ஜாதிக்காய்: ஜாதிக்காய், கற்பூரம், ஏலக்காய், கிராம்பு, சித்திர மூலவேர் சம அளவில் எடுத்துப் பொடியாக்கி, சிறிது தூள் எடுத்து

வாயிலிட்டு நீர் அருந்தி வந்தால் பெண்களுக்கு ஏற்படும் அதிக உதிரப்போக்கு, பக்கவாத நோய்கள், கபம் யாவும் விலகும்.

* ஜாதிபத்திரி: ஜாதிபத்திரி - 30 கிராம், சுக்கு, மிளகு, சீரகம் வகைக்கு - 10 கிராம் இடித்து தூளாக்கி 3 வேளை உணவுக்கு முன் 1/2 தேக்கரண்டி இந்த தூளுடன் 2 தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், அடிக்கடி வரும் வயிற்றுவலி, அஜீரணம், வயிற்று உப்புசம் நீங்கும்.

* குங்குமப்பூ: குங்குமப்பூவுடன் பால் சேர்த்து சாப்பிட்டால் கர்ப்பமான பெண்களுக்கு பிரசவகால தொல்லைகள் குறைந்து, குழந்தைக்கு நல்ல நிறம் உண்டாகும். குழந்தை பிறந்தவுடன் 5 கிராம் வீதம் 2 வேளை தர பிரசவ கழிவுகள் உடனடியாக நீங்கும்.

*வெள்ளைப்பூண்டு: தினமும் பகல் உணவில் பூண்டு துவையல் செய்து சோறுடன் பிசைந்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண் ஆறும். இதய படபடப்பு நீங்கும்.

தொகுப்பு: ஆர்.கீதா, திருவான்மியூர்.

Related Stories: