மேலும் ஒரு ஆள் கடத்தல் வழக்கில் தர்மபுரி அதிமுக நிர்வாகி கைது: சேலம் சிறையில் கே.பி.முனுசாமி, பாமக தலைவர் மணி சந்தித்து பேசினர்

சேலம்: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேயுள்ள தாளப்பள்ளத்தை சேர்ந்தவர்  டி.ஆர்.அன்பழகன். இவர் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆவின் கூட்டுறவு சங்க தலைவராகவும், அதிமுக மாநில விவசாய அணி தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். இவர் அதேபகுதியை சேர்ந்த 2 வாலிபர்களை கடத்திச் சென்று கட்டி வைத்து அடித்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் பென்னாகரம் போலீசார் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அதிரடியாக கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில் ராஜவேல் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் 2வது கடத்தல் வழக்கும் அவர் மீது பதிவு செய்யப்பட்டது. நேற்றுமுன்தினம் பென்னாகரம் நீதிமன்றத்தில் அன்பழகனை போலீசார் ஆஜர்படுத்தினர்.  அப்போது 2வது வழக்கிலும் அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் சேலம் மத்திய சிறைக்கு கொண்டு வந்து அடைத்தனர். இதனிடையே அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி சேலம் சிறையில் உள்ள அன்பழகனை நேற்று சந்தித்து பேசினார். கால் மணி நேரம் அவர் பேசினார்.

அதே போல எம்எல்ஏக்களான பாமக தலைவர் ஜிகே.மணி, வெங்கடேஷ்வரன் ஆகியோரும் சந்தித்து பேசினர். அதிமுக ஆட்சியின்போது அரசு உயர் அதிகாரிகளையும் அன்பழகன் மிரட்டியதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: